அன்னை ஓர் இறைவி

கண்கள் மூடி
கருவாய் இருள் அறையில்
நான் வாழ்ந்த
சிறை வாசம்
இறை வாசமாய் உணர்ந்தேன்......
கருவைத் திறந்து
வெளி வந்த நாள்
இரு விழிப் பார்த்து
காற்றை சுவாசிக்க
அத்துனை மனதிலும் களிப்பு
கரைத்திரண்டது
நான் மட்டும் அழுதேன்
தாயே பிரிந்தேனென்று.....
என் முகம் பார்த்ததும்
அலையாடும் ஆழியாய்
மகிழ்ச்சி
தாயின் முகத்தில்
மெய் மறந்தே இரசித்தேன்
எனக்காகவாயென்று......
மலரென
இரு கரம் தொடுத்து
பூவில் தவழும் பனியாய்
எனை ஏந்தி
இதழ் பதித்தது முத்தம்
வருந்தினேன்
பத்து திங்களாய் இதை
இழந்தேனென்று......
மலர்ந்து
ஒரு நாள் ஆனாலும்
திருநாளாக்கி
இந்த பிஞ்சு மேனியை
உயிரினும் மேலாய்
கருதும் உன்னத தெய்வம்
தாய்......