அம்ம்மா

அம்ம்மா,,,,, continuation,,,,,,,
*******************************************

பெரிய அளவில்
இலட்சியமில்லாத அவளின் ஆசைகள்
சிறிதே ஆனாலும்
அதை நாம் கேலி செய்யும்போது
நம்ம புருஷன் குழந்தைங்கதானே என
முறுவலித்துக்கொண்டே
அவற்றையெல்லாம் கடப்பாள்
மெகா சீரியலைக் குறித்த வாதங்களில்
நாளை என்னாகுமோ
என்ற தர்க்கங்களில்
அடுத்தவீட்டு பிள்ளைகளின்
அம்மாக்களை மிஞ்சும்போது
பெருமிதம் கொள்வதே
அவளின் பெரிய சாதனைபோல் கருதுவாள்
பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்டு
பேரப்பிள்ளைகளுக்கு
விடுமுறை விடும்போதெல்லாம்
தொலைப்பேசி அழைப்பில்
அவள் எதிர்ப்பார்ப்பது
"குழந்தைகளை கூட்டிகிட்டு எப்போ வர்ற"
என்பதாகத்தான் இருக்கும் ,,
அவள் சார்ந்திருப்பவர்களை
எப்படி மனம் கோணாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில்
அவளுக்கு நிகர் வேறு யாருண்டு ?? ம்ம்ம்
அவள் பிரியப்பட்டு வாசிக்கும்
புத்தகத்தின்
கதைகளைக் கேட்கக்கூட
பொறுமையற்றுப் போயிருப்போம்
எல்லா பொறுப்புகளையும்
இழுத்துப்போட்டுச் செய்யும்
அவளின் ஒவ்வொரு நாளின் முடிவிலும்
ஏதோ ஒன்றை
கணவனிடமோ பிள்ளைகளிடமோ
சொல்லித் தீராத மிச்சங்களுடனும்
குறைகளுடனும்தான்
அவளின் அன்றைய
அரை உறக்கம் இருக்கும் ம்ம்
எதற்கோ ஏனோ
அவமேலே கோபப்படும்
எல்லோருக்கும்
அம்மா இல்லாதவன் சொல்றேன்
நீங்க உறங்கும்போது
அவ உங்கமேலே போர்த்தும்
அவளோட முந்தானைப் போர்வையிலும்
அவ உள்ளங்கை
உங்க முகத்தை தழுவிடும்போது
மணக்கும் வெள்ளைவெங்காய நெடியிலும்
எல்லாக் கோபங்களையும்
மறந்திடுங்க ,,ஏனென்றால்
அந்த இதம் அவ இருக்கிறவரைதான் ம்ம்,,,
அழுத்தங்கள் தேங்கி தேங்கி
சர்வீஸ் செய்யப்படாத
அவளுடைய மனசில்
குவியப்பட்டவைகளோடும்
ஆடிக் களைத்த இயந்திர இதயம்
தடதடத்து ஒருநாள் நிற்கும்போதும்
வீடே வெறிச்சோடிவிடும்
மதிலில், முற்றத்தில் விளக்கிட சாமியின்றி ம்ம்,,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (10-May-16, 1:53 am)
பார்வை : 80

மேலே