காதல் என்பது ¿

மனதை பிழியும் உயிரை வருடும்
ஒருவித சுகவலி காதல் …
சுமையும் தந்திடும்
சுகமும் தந்திடும்
இனித்திடும் விஷமும் காதல்

விலகிட தோன்றும்
விரும்பிட தோன்றும்
எதிர்மறை எண்ணமும் காதல்

வாழவும் பிடிக்கும்
சாவையும் பிடிக்கும் - ஒரு
சுகமான நரகம் காதல்

பிரிவுகள் வலிக்கும்
உறவுகள் மதிக்கும்
பாடங்கள் நடத்திடும் காதல்

அனுபவம் என்பதே
அடிபட்டு கிடைப்பது
மறந்திட எளிதல்ல காதல்

மறுத்தால் மறுத்தது
மீண்டும் கெஞ்சிட
முளைக்காது இந்த காதல்

பிறப்பு ஒருமுறை
இறப்பும் ஒருமுறை
உருவமில்லா மானுடம் காதல்

அழகால் வராமல்
அந்தஸ்தால் வராமல்
அடிமனத்தின் நேசமாய் காதல்

கோடி கோடி செல்வம் கொண்டு
ஒரு நொடி கூட காதல்
ஜனித்திட வழிவகை
செயயமுடியாததே காதல்

எழுதியவர் : ருத்ரன் (13-May-16, 3:04 pm)
பார்வை : 100

மேலே