பிரதிபலிப்பு

என்னவளே

உன்னை மறந்து விடவே
எத்தனிக்கிறேன்

மீண்டும் மீண்டும்
என் நினைவு சாலைகளில்
தொடர்ந்து
பயணம் செய்கிறாயே
என்னடி செய்வேன் ,,,,,

உந்தன் பிம்பத்தை காட்டி
சிரிக்கிறது
என் வீட்டு நிலை கண்ணாடி

உடைத்தெறிந்தால்
பன்மடங்காய் சிரிக்கிறது

இப்படி இம்சிக்கின்றாயே
என்னடி செய்ய
உன் நிழல் பிம்பத்தை ,,,,!

எழுதியவர் : தங்கதுரை (14-May-16, 5:53 pm)
பார்வை : 278

மேலே