கவிதை கலவை
பட்டணத்தில் வந்து
சாயம் பூசிக் கொள்கிறது
கிராமத்து நதி
@@@@@@@@@@@@@@@@@
மழையோடு
வந்திருக்கிறது
நடமாட்ட வறட்சி
@@@@@@@@@@@@@@@@
இருதுளி கண்ணீரில்
விழுகிறது
சிரிப்பு
@@@@@@@@@@@@@@@@@
விழிகளில் நடந்து
செல்கிறது
பாதை
@@@@@@@@@@@@@@@@@
கடமை முடிந்தது
மை
பூசியவனுக்கு
@@@@@@@@@@@@@@@@@
மை அழியும் வரை
பேசப்படும்
ஜனநாயக கடமை
@@@@@@@@@@@@@@@@@
மழைத்துளிக்கு
பெயர்மாற்றம்
விழுமிடத்தில்
@@@@@@@@@@@@@@@@@
ஆழ்ந்த அமைதியில்
இரைச்சலின்
தூக்கம்
@@@@@@@@@@@@@@@@@
தள்ளாடி விழுந்தது
வாக்கு
குடிமகனில்
@@@@@@@@@@@@@@@@@
ரசிகனின்
அன்றாட வருகையில்
காணாமல்போனது எழுத்துப்பிழை
@@@@@@@@@@@@@@@@@
கயிற்றை
கட்டிக்கொண்டிருந்தது
மாடு
@@@@@@@@@@@@@@@@@
கண்களை கசக்கி
முடித்தேன்
சிலந்தி வலையாய்
எரியும் சுடர்
@@@@@@@@@@@@@@@@@