வேட்பாளரின் கவலை
தேர்தல் முடிவு வெளியாக இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. நீங்க தொகுதி முழுக்க 10,000 பேருக்கு தெனம் மூணு வேளையும் அவுங்கள நல்லா கவனிச்சு வீடு வீடாப் போயி உங்களுக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ண வச்சீங்க. கண்டிப்பா நீங்க ஜெயிச்சிருவீங்க அண்ணே. அப்பறம் ஏ நீங்க ஏ எதோ கவலப்படற மாதிரி தெரியுது.
@##
அட ஒண்ணுமில்லடா பக்கிரி. நான் தகாத பல வழிகளிலே பல ஆயிரம் கோடி சம்பாதிச்சேன். இருந்தும் என்ன பிரயோசனம். வாக்காளர்கள்ல பெரும்பாலோர் பணம் வாங்கிட்டு வாக்களிக்கக் கத்தூட்டாங்க. இந்தத் தடவ தேர்தல் ஆணையம் ரொம்ப கெடுபிடியா நடந்திட்டதாலே நம்ம ஆளுங்க பணப்பட்டுவாடா செய்ய முடியல. நா அமைச்சராகற கனவெல்லாம் பகல் கனவாப் போச்சுடா பக்கரி. எல்லாம் நாசமாப் போச்சுடா பக்கரி.
ஃஃஃஃஃ
விடுங்கண்ணே. நீங்க ஜெயிப்பீங்கின்னு நா நம்பறேன். நீங்க அநியாயமா பல ஆயிரம் கோடி சம்பாதிச்சவரா இருந்தாலும் உலகத்தில உங்களவிட சிறந்த பக்தி உள்ளவங்க யாருமே இல்ல. நீங்க கண்டிப்பா ஜெயிச்சு அமைச்சர் ஆவீங்க. அந்தக் கடவுள் உங்களக் கைவிடமாட்டார் அண்ணே.
@@@@
ரோம்ப நன்றிடா பக்கிரி. நீ சொல்லறது எனக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்குதடா பக்கரி. நா தெனம் கும்படற என்னோட குலதெய்வம் அந்த ஓங்காளி அம்மன் எனக்கு அருள் புரிவாடா.