பிரணி பிராணி
ஏம்மா நீ சின்னப் போண்ணா இருந்தாலும் பிராணிகள் (விலங்குகள்) நலனில் ரொம்ப அக்கறை காட்டற. பாராட்டறேன். உம் பேரு என்னம்மா?
@@@@@@
எம் பேரு பிரணிதா -ங்க அய்யா.
@@@@
அடடா. என்ன பொருத்தமான பேரு. பிரணி - பிராணி. இப்பிடி அழகான் இந்தி பேருங்களப் பிள்ளைங்களுக்கு வைக்கறவங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லும்மா. ஆமா அவுங்க ரண்டு பேரும் என்ன வேலைலிலே இருக்கறாங்க.
@@@@@
அய்யா எங்க அம்மா அப்பா ரண்டு பேருமே ஒரு மேல்நிலைப் பள்ளிலே முதுநிலைத் தமிழாசிரியர்களா இருக்காங்க அய்யா. அவுங்க ரண்டு பேருமே டாக்டர் பட்டம் வாங்கினவங்கய்யா.
@@@@@
உங்கம்மா அப்பாவோட இந்திப் பற்றை நா உளமாறப் பாராட்டறேன். இத மறக்காம அவுங்ககிட்ட சொல்லும்மா.
@@@@@@
சரிங்க அய்யா
@@@@