தேட்டை போடும் புள்ளிகள்

கவிஞர்.கொ.பெ.பிச்சையா அவர்களின் 'கூடக் கூடத்தான் கூட்டல்' என்ற அருமையான கவிதையின் பின்னூட்டமாக தேட்டம் என்ற பொருளைப் பற்றிய விவாதம் வருகிறது. எனவே நானும் வலைத்தளத்தில் தேடினேன்.

தேட்டை என்பதை தேடு + ட் + உ + ஐ என்று பிரிக்கலாம்.

இதற்கு நாடுகிற ஒன்றைப் பெற முயலுதல் (seek for support, consolation),

இழுக்கு, களங்கம் நேரச்செய்தல் (bring disgrace),

முன்னே இல்லாத ஒருவரை அல்லது தேவைப்படுகிற ஒன்றை அலைந்து விசாரித்து கண்டறிய முயலுதல் (Search),

காண, அடைய விரும்புதல், நாடுதல் (longing for) என்ற பொருள்களில் வருகிறது.

தேடுதல் என்ற பொதுவான பொருளிருந்தாலும், தேட்டை அல்லது தேட்டம் என்பது தவறான வழியில் கவர்வது என்ற பொருளே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உதாரணமாக, மதுரை வீரன் (1956) என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி, ஜி. ராமநாதன் இசையமைப்பில் டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி பாடிய ஒரு பாடலில் வரும் சில வரிகள்.

’தேட்டை போடும் புள்ளிகளெல்லாம்
கோட்டை விட்டு, கம்பி எண்ணணும்
சிறையில் கம்பி எண்ணணும்’

பாடலைப் பார்ப்போம்.

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க,
ஐயா எண்ணிப் பாருங்க! ஐயா எண்ணிப் பாருங்க!!

நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா,
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? நெனச்சுப் பாருங்க,
நல்லா நெனச்சுப் பாருங்க! நல்லா நெனச்சுப் பாருங்க!!

தேட்டை போடும் புள்ளிகளெல்லாம்
கோட்டை விட்டு, கம்பி எண்ணணும்,
சிறையில் கம்பி எண்ணணும்!

பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க,
பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும்,
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க,
நீங்க புரிஞ்சு கொள்ளுங்க! நீங்க புரிஞ்சு கொள்ளுங்க!!

காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை,
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை,
கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க,
ஐயா நல்லாக் கேளுங்க! ஐயா நல்லாக் கேளுங்க!!

ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்,
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்,
ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க,
நாமே வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க!

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க,
ஐயா எண்ணிப் பாருங்க! ஐயா எண்ணிப் பாருங்க!!

குறிப்பு:

நான் சொல்றது சரிதானா?
எண்ணிப் பாருங்க! ஐயா எண்ணிப் பாருங்க!!

ஊரை ஏய்ச்சுப் பிழைக்கவும் வேண்டாம்!
லஞ்சம் வாங்கி வாழவும் வேண்டாம்!

காவல்துறையால் பிடிபட்டால்
மானம் போச்சுங்க! மரியாதை போச்சுங்க!
ஐயா! குடும்ப பாரம்பரிய பெருமை போச்சுங்க!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-16, 10:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 192

மேலே