வானம் தொடு
வானம் தொடு
வானம்வரை எல்லையெனத் தொடங்கிடும்
வாழ்வின்
முடிவிற்கான
முயற்சி.
கவனம் சிதறிவிடுகிறது
சிதறும் என்பதில்
கவனமாக....
தன்னம்பிக்கையே காலமென
நம்பி பிழைக்கிறது
தன்னம்பிக்கையோடு...
முயற்சி யே ஆதாரம்
இயலாமையே
சேதாரத்திற்குதவியாய்....
தோல்விகளே வாழ்க்கையின்
முதலும் முடிவும்
தன் வரலாறு சொல்வதற்கு...
விடா முயற்சி யும் நம்பிக்கை யும்
சேர்ந்த வாழ்க்கையில்
முடியாது என்ற இயலாமையே....
வெற்றி தோல்வியே வானம் வரை
கூட்டல்களே ஆதாரம்
முடிவிலா வாழ்க்கைக்கு....
எது என்பதில் இல்லை முயற்சி
எதிலும் என்பதில்....
எதுவும் முடியாது என்பதில் இல்லை
எதுவும் முடியும் என்பதில்தான் வாழ்க்கை....
காலத்தின் மிகுதியில்
தப்பிப் பிழைத்தவைகளே
தன்னம்பிக்கையின் விகுதி......