மதுப் பேரலையின் தாக்கம்
தள்ளாடித் தடுமாறி
நகர்ந்து வந்த மது அலைகள்
முதல் கையெழுத்து
சொற்றொடரைக் கேட்டவுடன்
ஆழிப் பேரலையாகச்
சீற்றம் கொண்டு
முதல் அமைச்சர் வேட்பாளர்களின்
கனவு எல்லாம்
கானல் நீராய் திரிந்து போக
பல்லாண்டு குடித்துப் பழகியவர்களை
படிப்படியாய் என்றுறுதி அளித்தவர்க்கு
ஆதரவாய் மாற்றியது
விபத்து அல்ல.