வினாக்களும் விடைகளும்
விடைகளே அறியாத வினாக்கள்
விடைகளே இல்லாத வினாக்கள் !
வியப்பூட்டும் விடைகள் வினாவிற்கு
விந்தையான விடைகள் வினாவிற்கு !
சிந்திக்க வைக்கும் வினாக்களுக்கு
நிந்திக்க வைத்திடும் விடைகள் !
அறிந்த வினாக்கள் ஆனாலும்
அதிர்ச்சி அளிக்கும் விடைகள் !
அமைதியாய் கேட்கும் வினாக்கள்
அதிரடியாய் உரைக்கும் விடைகள் !
விளங்கிடும் விதமான வினாக்கள்
விளங்காத விதத்தில் விடைகள் !
தேர்தல் காலத்து வினாக்கள்
தேற்றிட முடியாத விடைகள் !
வீழ்ந்த நிலையில் ஜனநாயகம்
விழுப்புண் நிறைந்த நடுநாயகம் !
தொடரும் வாழ்வில் வினாக்கள்
தொய்வுற்ற நிலையில் விடைகள் !
ஏற்றம் காணவே வினாக்கள்
என்றும் சரிவே விடைகள் !
புரிந்திடும் என்வரிகள் உங்களுக்கு
புரியாத புதிரல்லஇது உங்களுக்கு !
பழனி குமார்
20.05.2016