காதல் நதி
சிற்பி செதிக்கிடும் போது அழகுச் சிலையானாய்
செவ்விதழ்ச் சிரிப்பினில் எழுதாத ஓவியமானாய்
சிறு மெல்லிய விரல்கள் மீட்டும் இன்னிசையானாய்
அசையாது நிற்கும் போது பளிங்குச் சிலையானாய்
அசைந்து நடந்து வரும்போது காவிரி நதியானாய்
அருகில் நான் வரும்போது நீ காதலானாய் !
----கவின் சாரலன்
யாப்பிற்கு வாய்ப்பிருக்கிறது .
ஆர்வலர்கள் முயலலாம்