வாழ்த்து மடல்
தமிழகத்தைக் காப்பதற்குத் தாயாக உருக்கொண்டு
அமிழ்தமென மக்களிடம் அன்னையென விளங்குகின்ற
தமிழகத்தின் மாதாவே ! தன்னிகரில்லாத் தலைமையே !
உமைப்போலே வேறொருவர் உலகினில்நான் கண்டதில்லை .
முதல்வராகப் பதவியேற்ற முத்தமிழின் வித்தகமே !
உதவுகின்ற நெறிவழியே உன்னதத்தின் செங்கோலே !
பதவியுன்னால் சிறந்திருக்கப் பணிவான நற்றாயாய்
விதவிதமானத் திட்டங்கள் விரைந்துநீங்கள் செய்தீரே !
அன்னையென நீங்களன்றோ அகிலத்திற்கு சான்றாக
உன்னதமான வாழ்வுமுறை உருவாக்கித் தந்திடவே
நன்னெறிகள் பலவற்றை நலமுடனே வகுத்திட்ட
அன்பான அன்னையே ! அனைத்துலகப் பெட்டகமே !
மக்களாட்சி உருவாக்க மகத்தானக் கொள்கைகளை
எக்காலமும் மறுப்பின்றி ஏற்கின்ற வழிநின்று
திக்கெல்லாம் நின்புகழே திகழ்கின்ற வகைசென்று
பக்கபலமாய் நின்றுநீங்கள் பாசமுடன் நோக்குகின்றீர் !
அற்புதமான முதல்வரே ! அகிலத்திற்கோர் எடுத்துக்காட்டே !
பொற்புடைய நல்லாட்சியைப் பொறுமையுடன் சாதிக்கும்
கற்றவரே ! எத்திக்கும் கருத்தோங்கும் கன்னித்தமிழே !
வெற்றிகளைக் குவித்திட்ட வீரத்தின் வியன்பொருளே !
அம்மாவென சொல்லும்போதில் அனைத்துமே நீங்களன்றோ !
வம்புசண்டை தமிழகத்தில் வந்திடாது காக்கின்ற
உம்மையன்றோ தெய்வமென்று உலகிற்கு எடுத்துரைப்பேன் .
செம்மையான நாடாளும் செந்தமிழே வாழ்கவாழ்க !!!
கவிதையாக்கம் :-
கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு