தமிழ் மீண்டும் உதிக்கும்
சிறகொடிந்த பருந்தென்னை
நிந்திக்க நினைத்தாயோ?
நினைவில் கொள்!!
என் சிறகுடைந்து போனாலும்
மனமுடைந்து போகாது!
என் நிழல் கண்டு நிலை குலையும்
கோழி , குருவி கூட்டமெல்லாம்...
கோமாளி என பழித்து,
என்னை நகையாட நிற்கின்றேன் !
இனம் மாறி ஒப்பிட்டு,
என்னை இழிவாக பாராதே !!
கொக்கரித்து கூச்சலிடும்
கோமாளி நான் இல்லை!!
பார்வையிலே பகையோழிக்கும்
பயமறியா பருந்தாவேன் !
கூடிருக்குள் பூட்டி வைக்க
சிறு பறவை நானல்ல!!
வானுயர வட்டமிடும்
வலிமை மிகு வல்லூறு !
கிலி கொள்வீர் !!
கீழோரே !
கிலி கொள்வீர் !!
மீண்டும் நான் ..
வானத்தில் வட்டமிட
வலிமையுடன் வந்திடுவேன் !
நீ அண்ணார்ந்து பார்த்திடவே
பாரெங்கும் பறந்திடுவேன் !!