மதுபானம் ஒழிப்பீர்

இரவு பகல் பாராது
திறந்திருக்கும் மதுக் கடைகள்,
தவறாது மது அருந்தி வேலைக்குச்
செல்லும் பல இளைஞர்கள்!

பூமியின் பாரம் குறைக்க
வகை வகையாய் வாகனங்கள்,
விரைந்தும் முந்தியும் செல்ல
போட்டியாய்ச் சாலைகளில்!

நெடிய நெடுஞ்சாலை விபத்துக்கள்,
அடிபட்டவர் கோழிக் குஞ்சுகளாய்
தலை நசுங்கி, உடல் சிதைந்து
மருத்துவ மனைகளில் அனுமதி!

விவேகமாய் இருப்பீர்
மதுபானம் ஒழிப்பீர் - உடன்
வாகன வேகத்தைக் குறைப்பீர்,
மனித நேயமும், உயிரும் காப்பீர்!

குறிப்பு:

குடிப்பழக்கமுள்ள மேனாடுகளில் பெரும்பாலானோர் குடித்து வந்தாலும், பகல் நேரங்களில் மது அருந்தும் பழக்கமுள்ளோர்க்கு பெண் கொடுக்க மாட்டார்களாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-May-16, 9:42 pm)
பார்வை : 73

மேலே