கனவொன்று காண்பீர்

கனவொன்று காண்பீர் இளைஞர்களே
காலமும் உரைத்தார் கலாமவர்கள் !
சிந்திக்கத் தூண்டினார் சிறார்களையும்
சிறகடிக்கச் செய்தார் சிந்தைவானில் !

மாணவனின் கனவால் மாற்றம்வரும்
மண்ணில் வாழ்வும் வளம்பெறும் !
மாணவன் நினைத்தால் கூடிடும்விசை
மறுப்பவர் எண்ணமும் மாறிடும்திசை !

ஏக்கங்கள் நிறைந்திட்ட கனவுகளில்
ஏழைகள் ஏற்றம்பெற வழிதேடுவீர் !
அறிவார்ந்த ஆய்வுகளை நடத்திடுவீர்
அறிவுசார் செயல்களை செய்திடுவீர் !

பழனி குமார்
27.5.2016

எழுதியவர் : பழனி குமார் (28-May-16, 7:54 am)
பார்வை : 2049

மேலே