காண்பதெல்லாம் கண்களுக்கு ஆனந்தமே
குருவி கூடு கட்டுவதைக் காண்பது அழகு
வானத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் அழகு!
சின்னஞ்சிறு குழந்தைகள் கைகளில்
’பார்பி’ பொம்மை அணைத்து உறங்குவதும் அழகு!
தன் அப்பாவுடன் கொல்லைப் புறத்தில்
ஓடி ஆடி பந்து விளையாடும் பாலகன் அழகு!
தன் அம்மாவுடன் வீட்டிற்குள் ஒளிந்து,
கண்ணாமூச்சி விளையாடும் கண்மணி அழகு!
தாய்மை தன் மாராப்பில் மறைத்து
தன் பிள்ளைக்குப் பாலூட்டுவதும் ஓவியமாய் அழகு!
காண்பதெல்லாம் கண்களுக்கு எ(ங்)ன்றும்
அன்புமயமும், ஆனந்தமுமே தனி அழகு!