அப்பா

அப்பா....
இந்த ஒரு வார்தையில்....
என் உள்ளம் பூரிக்கிறது!
நான் செய்த பெரும் தவறுகளையும்.....
சிறு தவறுகளாய் எண்ணி என்னை மன்னித்தீர்!
நான் தடுமாறும் சமயங்களில்....
எனக்கு தட்டிகொடுத்து என்னை ஆதரித்தீர்!
உங்களது கோபங்களையும் ஆசைகளையும்.....
எங்களுக்காக விட்டு கொடுத்தீர்!
தாயீர் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமை கொண்டாலும்
அன்னை தந்தையே அன்பின் எல்லை...!
இவ்வரிகளுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தீர்கள்....
என் அன்பு தந்தையே.....
எனக்கு அனைத்தையும் பழக்கி
அதை நடைமுறை படுத்த....
பெரும் பாடு பட்டீர்!
நான் எடுத்து வைக்கும் அடிகளில்
என்னக்கு பக்கபலமாக இருப்பீர்!
இன்னும் நிறைய கூற ஆசையே....
ஆனால்....
என்னால் கூற முடிந்தது....
நான் செய்த அனைத்து தவறுகளுக்கும்
எனது மன்னிப்புகள்....
தாங்கள் எனக்கு செய்த அனைத்திற்கும்
எனது நன்றிகள்....!!!!!

எழுதியவர் : (2-Jun-16, 5:25 pm)
Tanglish : appa
பார்வை : 678

மேலே