ஆயுள்கைதி

ஆயுள்கைதி

படைகள் வந்து எதிர்த்தாலும்
பயமின்றி நிற்ப்பவன் !

பலவித ஆயுதங்கள்கொண்டாலும்
போருக்கு அஞ்சாதவன் !

தடைகள் தொடர்ந்து வந்தாலும்
தோல்வியில்லை எதிலும் !

ஆயிரம் தடைகள் தகர்த்தவனை
ஆயுதமின்றி தோற்க்கடித்தாயே !

வன்முறையாய் பல போரிட்டவனிடம்
விழிகளால் போரிட்டாயே !

இமை மூடாது போரிட்டு
இதயத்தை வெற்றிக்கொண்டாயே !

இமயமென நின்ற வீரமகனை
இதயச்சிறையில் அடைத்தாயே !

அஞ்சா நெஞ்சன் உன்னிடம்
ஆயுள்கைதி ஆனானே !

மீள வழியிருந்தும் அவனிடம்
மீண்டுவர எண்ணமி்ல்லையே !

காதல் சிறையில் பூட்டிக்கிடக்க
காலம் முழுதும்

அவளின் காதல் கட்டளைக்கு
அடிமை ஆனானே !

எழுதியவர் : புகழ்விழி (3-Jun-16, 10:25 am)
பார்வை : 252

மேலே