தீபத்தின் ஒளியில்
தீபத்தின் ஒளியில் இருள்விழகும்
வெளிச்ச ராஜ்ஜியம் கோலோச்சும்
ஆபத்து வண்டுகள் பறந்துவிடும்
முகமும் அகமும் அதில்மலரும்
திரியாகி ஒளிகொடுக்கும் சூட்சுமத்தை
ஞானிகளும் மேதைகளும் பெற்றிருப்பர்
அழுதேதான் ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்தி
தன்னொளியை பகிர்ந்தளித்து ஒளிபெருக்கும்
கல்விதரும் மனதிற்குள்ளே நல்லஒளி
அதுகாட்டிடுமே வாழ்வினிலே நல்லவழி
தியானத்தையும் மௌனத்தையும் கடைபிடிக்க
அமைதியாக ஆழ்மனமும் மகிழ்ந்திருக்கும்
இருள்மட்டும் இருந்திருந்தால் என்னவாகும்
கல்லுரசி நெருப்பைகண்டவன் கடவுளாவான்
ஒளிகொடுக்கும் தீபமாக வாழ்க்கைமாற
உதவிடுவோம் வேண்டுவோர்க்கு முடிந்தமட்டும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
