பகல் கனவு
ஏழைக் குழந்தையின் கனவில் வரும்
பசியை போக்கும் உணவு கிடைத்தால்
ஏழை விவசாயி கனவில் வரும்
வறுமை தோற்று செழிமை ஜெயித்தால்
லட்சிய மாணவன் கனவில் வரும்
வெற்றி மாலையும் விரைந்தே வந்தால்
எல்லாக் கனவும் பலிக்கட்டும்
இதில் இரவென்ன பகலென்ன சரிதானே..
குடிமகன் ஒருவனின் கனவில் வரும்
ஊழலில்லா அரசாங்கம் நிஜத்தில் நடக்க
பெண்கள் அனைவரின் கனவில் வரும்
பொறுப்புள்ள ஆண்கள் எங்கும் நிறைய
தொழிலாளி வர்க்கத்தின் கனவில் வரும்
உழைப்பிற்கேற்ற ஊதியம் மகிழ்ச்சி கொடுக்க
எல்லாக் கனவும் பலிக்கட்டும்
இதில் இரவென்ன பகலென்ன சரிதானே...