காசுக்கு கீழே கல்வி

தமிழ்நாட்டு சொத்து கல்வி
அது ஆனதென்ன சொல்லு
அரசாங்கம் பித்தாய் போக‌
கல்வி போனதெங்கே சொல்லு

பட்டம் வாங்க பணம்வேணும்
மருத்துவம் சேர பணம்வேணும்
தொழில்நுட்பம் கற்க பணம்வேணும்
பணமில்லையென்றால் ஒன்றும் இல்லை

ஏழையின் வாசல் விட்டு
ரொம்ப தூரம் போச்சு கல்வி
அவனை தனியே தவிக்கவிட்டு
விவகாரமாச்சு கல்வி

சரஸ்வதிக்கும் இங்கே படிக்கதெரியாது
ஏழையின் வீட்டில் பிறந்திருந்தால்
லெட்சுமிக்கும் கூட கல்விகிடைக்காது
காசு ஏதும் இல்லையென்றால்

காசு இருந்தா கல்வி
காசு கொடுத்தா கல்வி
காசா போச்சே கல்வி
காசுக்கு கீழே கல்வி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-16, 1:38 pm)
Tanglish : kasukku keeze kalvi
பார்வை : 1820

மேலே