தேனாடையில் தேனீக்கள்•••

சுத்துபட்டு கிராமங்களுக்கே ஒரே ஒரு அரவை மில்லு, அந்த அரவை மில்லுல அரவைக்காரன் சிங்காரம்

எமனப்போல ஒரு டீசல் இஞ்சின் அதை சிங்காரத்தை தவிர்த்து வேரு யாரேலேயும் கிளப்பவே முடியாது அதனால அரவைமில்லை அவன் பொருப்பிலேயே விட்டுவிட்டார் முதலாளி

சிங்காரனும் தன் சொந்த சொத்தைப்போல கண்காணித்து வந்தான் அவனது குடும்பத்தை அவனுக்கு கிடைக்கு சம்பளத்தை கொண்டு பட்டினி இல்லாம ஓட்டினான்

ஒரு நாள் எமகாதக எந்திரமே அவனுக்கு எமனா அமைஞ்சி உயிரை விட்டுக்கொண்டான்

அரவை மில் லுக்கு சொந்தக்காரர் சிங்காரத்தின் பத்து வயசு மகனை வேலைக்கு அமர்தி சிங்காரத்தின் குடும்பத்தை பார்துக்கொட்டார்

அந்த சிங்காரத்தின் உயிரக்குடித்த எமகாதக எஞ்சினை விற்றுவிட்டு மின்சார மோட்டாரை பொருத்தி அந்த சின்னப்பையனுக்கு வசதியாய் அமைத்து கொடுத்தார்

மகனும் தன்பிதாவின் இழப்பை மனதில் கொண்டு தன்தாயை பொருப்பாக கவணித்தான்

பையன் வளர வளர ஒரு கதாநயகனை காட்டிலும் பலமடங்கு பலரும் அதிசயிக்கும் வதத்தில் வளர்ந்தான்

சினிமாகாரர்கள் கண்ணில் பட்டால் அப்படியே லட்டு மாதிரி கொந்திக்கிட்டு போயிடுவாங்க அந்த அளவுக்கு எடுப்பாகவும், துடிப்பாகவும், நல்லா வாட்டசாட்டமாகவும் செவப்பாகவும் காணப்பட்டான்

அரவைமில் முதலாளிக்கு எங்கே நம்மைவிட்டு போய்விடுவானோ என்ற அச்சம் உண்டாகிவிட்டது அதனால் அவனை வெளியில எங்கேயும் அனுப்பாம வைத்திருந்தான்

முன்பெல்லாம் வெறும் கிழக்கூட்டங்கள்தான் அரவைமில்லுக்கு வந்து போயிக்கிட்டு இருந்தது

சிறுகச்சிறுக சிறுமியர் கூட்டம் மில்லுக்கு வர ஆரம்பமாகிவிட்டது

தேனாடையில் தேனீக்கள் மொய்ப்பதுபோல குமரிக்கூட்டம் நிறைந்து காணப்பட்டது

தின்பண்டம் வாங்கிதருவதும், குளிர்பாணம் வாங்கித்தருவதும் வீட்டிலிருந்து சாப்பாடே கொண்டுவந்து கொடுப்பது போன்ற சங்கதிகள் நடக்கலாயிற்று

நரைவிழுந்த பெண்கள்கூட வேட்டையை ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் பாருங்களேன்

இவர்கள் உள்ளத்தைத் தோண்டிப்பார்த்தால் அதிலேயும் பையனை சுருட்டும் காதல் இருப்பதை கண்டெடுக்கலாம்

குமரிகள் எண்ணம் இவனை எப்படியவது கல்யாணம் பண்ணிக்கனும் என்பதே

நரைவிழுந்தவர்களின் எண்ணம் இவறை எப்படியாவது நம்ம மகளுக்கு புருஷனா ஆக்கிடனும் என்பதே

குமரிகளும், நரைவிழுந்ததுக்களும் பையனை மோட்டார் இருக்கும் ரூமுக்கு அழைத்துப்போவார்கள் ஆசைப்பட்டவர்களுக்கு வேட்டையாடும் களம் போல இருக்கு

இதில் நாலைந்து குமரிகள் வாந்தி எடுக்கும் நிலமைவரை வந்துவிட்டார்கள் அதில் ஒருத்தி கொஞ்சம் வசதிபடைத்தவள் தன் வீட்டில் இருந்து கொஞ்சம் பணம்தேவையான நகைநட்டை சுருட்டிக்கொண்டு பையனிடம் கெஞ்சி கூத்தாடி ஊரைவிட்டே கிளப்பிக்கொண்டு போய்விட்டாள்

மீதி வாந்தி எடுத்தக்குமரிகள் கருவை கலைத்துவிட்டு துக்கத்தில் ஆழ்ந்தார்கள் அதில் ஒருத்தி தூக்கில் தொங்கிவிட்டாள் கருவை கலைத்தவர்கள் விசயம் வெளியேத்தெறிய எவனும் கட்டிக்கொண்டு போகாமல் கட்டையாக கிடக்கிறார்கள்

ஓடிப்போனவர்கள் கையில் இருந்தது தீர்ந்துவிடவே பூக்களை வாங்கி கட்டி விற்று ஜீவிக்கவேண்டிய நிலமை, பையன் மொடாக்குடிகாரனாகிவிட்டான்

ஒருநாள் எழுந்து நடக்கமுடியாத அளவுக்கு குடியை குடித்து விட்டு
சிறுநீர் கழிக்க ரயில் ரோட்டுப்பக்கமாப்போக ரயில்வர ஆளு காலி

காலியானவனை கார்ப்ரேஷன் காரன் அனாதை பொணம் என அடக்கம் பண்ணிவிட்டது

பெண் ஊரை அடிச்சி ஒலையில போடுரவங்க கையில மாட்டி கடைசியில தன் வயித்தை கழுவ
சிவப்புவிளக்கு வீதிக்கு விற்றுவிட்டார்கள்

பிறந்த குழந்தை கண்ணை குருடாக்கி பிச்சை எடுக்கவிட்டு சிலர்அதில் பிழைக்கிறார்கள்

புரட்சிப்பெண்ணாக புறப்படுவாள் என எதிர்பார்க்கப்பட்டவள் கடைசியில் வறட்சிப்பெண்ணாகிவிட்டாளே என்ற ஆதங்கம் அலைபாய்கிறது

பையனின் தாய்க்கு விசயம் எட்ட பைத்தியக்காரியாகி விட்டாள் அந்த ரைஸ் மில்லுக்காரர் மனித அபிமானம் உடையவர் அவளோட வயித்துக்கு கஞ்சியோ கூழோ ஊத்திக்கிட்டு வரார்

பையனோட ஓடிப்போன பெண்ணை அவளை பெத்தவங்க தேடி கண்டுபிடித்து , கண்ணு போன பேரப்பிள்ளையோடு போலீஸ் மூலமா மீட்டுவந்து பையனின் தாயையும் ஒன்னா இருக்க ஒரு வீடு வாங்கி கொடுத்து பார்த்துக்கொண்டார்

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி, மும (6-Jun-16, 9:30 pm)
பார்வை : 132

மேலே