நீயும் நானும் காதலும்

உடலும் உயிருமாய்
நீயும் நானும்!!
சிறு சிறு சண்டைகள்
சில நேர நெருடல்கள்
உன் வார்த்தை காதில் கேட்கா
செல்ல கோபங்கள்.......
உன் அன்பில் கரைந்த என் கோபம்
சத்தமும் சமாதானமும்
நிதம் பொழுது......
உன் நிழல் பார்த்து
பேசிய வார்த்தைகள்- நாணத்தில்
முகம் பார்த்து
பேசிய வார்த்தைகள்- காதலில்
சிவந்த கன்னங்கள்......
சேரும் நாள் எண்ணி கழிந்தன
பிரிந்த நாட்கள்.....
பிரிவின் சுகம் கூட அழகுதான்
உன் முகம் பார்க்கா காதல்
தகவல் பரிமாற்றத்தில்.....
சிறு சிறு காயங்கள் - நம்
காதலை வெளிபடுத்த....
நாட்கள் கடந்தாலும்
நான் கொண்ட குருதி குறைந்தாலும்
மாறாது நம் காதல்......

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (8-Jun-16, 4:53 pm)
பார்வை : 310

மேலே