குற்றாலம்

குற்றாலந்தான் போகலாம்
குடும்பத்தோடு போகலாம்
குளித்துநாமும் மகிழலாம்
குரங்குகூட பார்க்கலாம்.

தேனருவி போகலாம்
தேன்கூடு பார்க்கலாம்
மலைத்தேனைத் தின்னலாம்
மனமகிழ்ந்து சிரிக்கலாம்.

ஐந்தருவி போகலாம்
ஆசைதீர குளிக்கலாம்
அழகை அங்கு ரசிக்கலாம்
ஆனந்தமே அடையலாம்.

பழைய அருவி பார்க்கலாம்
பரவசமே கொள்ளலாம்
பசியாற தின்னலாம்
பழுத்தபலா உண்ணலாம்.

புலியருவி போகலாம்
புதிய எழில் காணலாம்
தலைநனைத்து குளிக்கலாம்
தனைமறந்து மகிழலாம்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (9-Jun-16, 8:02 pm)
Tanglish : kutraalm
பார்வை : 172

மேலே