மயிலே நீ ஆடு

மயிலே மயிலே நீ ஆடு
மயக்கும் மயிலே நீ ஆடு
மழையது வருது நீ ஆடு
மாந்தர் மகிழ நீ ஆடு.

தேசிய பறவை நீ ஆடு
தேசம் புகழ நீ ஆடு
நேசம் வளர நீ ஆடு
நிம்மதி பிறக்க நீ ஆடு

வண்ணத் தோகை விரித்தாடு
கண்கள் குளிர களித்தாடு
எண்ணம் சிறக்க நீ ஆடு
எழுச்சி பிறக்க நீ ஆடு.

முருகன் மயிலே நீ ஆடு
முருகனைச் சுமந்து நீ ஆடு
மழையது பெய்ய நீ ஆடு
மண்வளம் செழிக்க நீ ஆடு
************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (9-Jun-16, 8:09 pm)
Tanglish : mayile nee aadu
பார்வை : 100

மேலே