கவிபாடும் காக்கை

காக்கை நிறப் பெண்ணே!
உந்தன் கறுப்புதான் கவர்ந்தது என்னை
கறுமை தீட்டியக் கண்ணே !
உந்தன் காந்தப் பார்வைதான்
ஈர்த்தது இந்த கவிஞனை!

மண்ணை நோக்கியே
தினம் தலை சாய்த்து
வலம் வரும் என் கறுப்பு நிலவே
உன் கார்மேகக் கூந்தலுக்கு
தினம் தேய்த்து விடவா
தேங்காய் எண்ணெய்...!

ஆண் மகனைக் கண்டால்
நாணும் தமிழ்ப் பெண்ணே!
உன் எழிலைக் கண்டு கவிபாடாதவன்
இவ்வூரில் யாருண்டு சொல்?

கண்ணே என் காதலியே
இசைபாடி தினம் மயக்கும்
என்னிளம் கருங்குயிலே
என்னிடம் மட்டும் கவிபாட மறுப்பது ஏன்?

அனுதினமும் மெளனம் கொள்ளாமல்
உன் செவ்விதழ் திறந்து
ஓர் இனிய சொல்லொன்று
நீ சிந்துவது எப்போது - சொல்?
அப்பொழுதான் முழுமைபெறுவேன் நான்

கவிபாடும் காக்கையே
வாழ்வு கொடுத்தாலென்ன காதலியே
கண்முன் வந்து செல்லடி தேவதையே
உன் நினைப்பில் நான் வாழ்ந்திடுவேன்!

எழுதியவர் : (15-Jun-16, 8:37 pm)
Tanglish : kavipaadum kaakai
பார்வை : 75

மேலே