கண்ணெதிரே தோன்றினாள் தொடர் கதை - பகுதி 1

மீண்டும் ஒரு முறை தன் கைப்பையை தடவிகொண்டான் விக்னேஷ். கண்கள் அவனை அறியாமல் நீரை சொரிந்தன. மனதிலே குடிகொண்ட காயத்துக்கு மருந்து இல்லாமல் அவன் தன்னையே புண்ணாக்கி கொண்டிருந்தான்.
'' என்னடா மச்சான் ! இன்னும் அவ நெனப்பா?" சுகனின் கேள்வி காற்றிலே மறைந்தது. " அப்படி என்னதான் இந்த பய்ல மறைச்சி வெச்சி இருக்குற? மீண்டும் சுகனின் கேள்வி காற்றுக்குள் மறைந்தது. விக்னேஷ் எண்ணங்களுக்குள் கட்டு பட்டு பழைய நினைவுக்குள் மறைந்தான்.
"ரோஜா ரோஜா ... கண்ட பின்னே .....! செல்போன் சிணுங்களுக்கு கலைப்பட்ட உறக்கம் மீண்டும் வரவே மறுத்தது. வ்ரோங் நம்பர் என்றாலும் பேசிய குரல் தூக்கத்தை கலைத்து உடைந்த ரெகார்ட் போல மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தது. " கவி நாளக்கி என் பிறந்த நாளுக்கு வருவ இல்ல? " விக்னேஷ் தூக்க கலக்கத்தில் " கவியா? நீங்க ?" நான் நித்தி " சாரி வ்ரோங் நம்பர் என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது . நித்தி அழகான பெயர் தான் என்று எண்ணியவனுக்கு மீண்டும் தூக்கம் வர மறுக்கவே " பாட்டி காபி ரெடியா ? என்றவாறே பாட்டியிடம் சென்றான். வா விக்கி! சுட சுட காபி ! பல்லு துலக்காம குடி ! என்று கடிந்தாள்.
இல்ல பாட்டிமா பல் துலக்கினா பெட் கோபி குடிக்க முடியாதே என்று காபியே உரிஞ்சான்.

எழுதியவர் : மாஹிரா (16-Jun-16, 8:14 pm)
பார்வை : 365

மேலே