கையில் தவழும் கனவுகள் ~ சகா

முனை மழுங்கிய
பேனாக்கள்
முன்னுரை வாசிக்கின்றன...

கழுத்து தொங்கிய
கொக்குகளாய்
காத்திருக்கிறது கண்கள்...

சிந்தையில்லாமல் சிதறிவிழும்
சில சில்லறைச்
செய்திகளுக்காய்...

அர்த்தமற்ற விளம்பரங்கள்
கூட அனுதாபம் தேடி
அலைகிறது...

உணர்வுகளும், எண்ணங்களும்
உடைந்து விழுகிறது
உதிரிச் சொற்களாய்...

ஆரத்தழுவிச்சொல்லும்
ஆறுதல் கூட
RIP இல் முடிந்து விடுகிறது...

படைப்புகள் எல்லாம்
பரப்பி வைக்கப்படுகிறது
விருப்பம் தேடி...

கனவுகள் எல்லாம்
கையில் தவழ்கிறது
கருத்துக்கள் கேட்டு...

இன்று
காட்டுத் தீ செய்திகள் கூட
பூச்யத்திற்கும் ஒன்றுக்கும்
உடன்பட்டுவிட்டது...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (17-Jun-16, 12:06 am)
பார்வை : 595

மேலே