என் பச்சைக்கிளியின் பிறந்தநாள்

பார்த்தவுடன் பரவசங்களை
சட்டைப்பைக்குள் திணித்துவிடும்
பச்சைக்கிளியே....

என் வாழ்க்கை
யாருடனோ....அல்லது
யாருமற்று..,வெறுமையாய்
தொடர்ந்திருக்கலாம்..
ஆனால்...
உன்தன் வருகையால்...என்
ஜுவனுக்குள் சந்தோச. சங்கீதங்கள்...

யாரோடும் நான் என்
முழுமையை உணர்ந்ததில்லை
உன்னைத்தவிர....

என்னை முழுமையாக்க வந்த
முழுமுழுநிலவே.....
என்னை பாசத்தால் பக்குவம்
செய்த பைங்கிளியே.,
மலர்ச்செடியே...
பூங்கொடியே...
மழை நிலவே...
மாலைத்தென்றலே...
மாடப்புறாவே...
மகிழ்ச்சியூட்டும் கனாவே...

உன் பிறந்த நாள்
என் மனப்போராட்டங்களுக்கான
சுதந்திர நாள்...

என் அன்பே...
காலங்களுக்கு நாம் நன்றி சொல்வோம்.,
எனக்கு உன்னையும்
உனக்கு என்னையும்
அறிமுகம் செய்ததற்காய்...

என் மொத்த வாழ்வையும்
உன்னோடு வாழ்வதையே
வரமாய் பெற பிரார்திக்கின்றேன்...

எங்கே நீ சென்றாலும்...
உன் பாதங்களோடு என்
பாதங்களும் பதியவே
தவங்கள் மேற்கொள்கிறேன்...

என் அன்பை புரிந்துகொண்டவள்
நீதான்...
என் கோபங்கள் உன்னை
காயப்படுத்த அல்ல...
உன்னை பக்குவப்படுத்த...
என் கோபங்கள் எல்லாம்
உன் பார்வையின் முன்னே
கோவில் தீபங்களே...

கண்ணே நான் கானும்
சொர்க்கலோக கனாவே.,
தென்றலாய் இரு நான் சோர்கையில்.,
பூக்களாய் இரு நான் பேசுகையில்..
தேனாய் இரு நான் தேடுகையில்.,
மானாய் இரு நான் துரத்துகையில்..
துணையாய் இரு நான் துன்பப்படுகையில்...
தூரலாய் இரு நான் சந்தோசம் கொள்கையில்...
தாலாட்டாய் இரு நான் தூங்குகையில்...
தண்ணீராய் இரு நான் தாகம் கொள்கையில்...
கண்ணீராய் இரு நான் அழுகையில்..
ஆதரவாய் இரு நான் ஆனந்தப்படுகையில்...
ஆகாரமாய் இரு நான் பசித்திடும் வேளையில்..

கருணையாய் இரு நான் தவறிழைக்கையில்...
மெல்லிசையாய் இரு நான் கோவப்படுகையில்...
மொத்தத்தில் என் மொத்தமாய் இரு..

என் ஜீவ நதியே,காதலே,கவிதையே,
முத்தே,மணியே,சொல்லே.,
நான் வணங்கும் தமிழே..அமுதே,,
யாதுமறியா கொழுந்தே...

உன் கைகளில் என் இதயத்தை
பரிசாய் தந்து...
உன் பாதங்களில் என் முத்தத்தை காணிக்கையாய் தந்து

வாழ்த்துகிறேன்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..,

அன்பே..,

-தாஸ்-

எழுதியவர் : காதல் (17-Jun-16, 11:36 pm)
பார்வை : 104

மேலே