சாரு கிருத்திக்
உனை பத்துமாதம் சுமக்கவில்லை என்றாலும்(என்றால் என்ன)
நீயும் என் பிள்ளை தான்
உனை அணைக்கத் தான் என்னால் இயலுகிறது
அடிக்க நினைப்பது கூட இல்லை
பால் வார்க்கவில்லை என்றால் என்ன
இந்த பந்தம் இல்லாமல் போய்விடுமா
எனை நீ அம்மா
என்றழைக்கயில்
என் உச்சி முதல் பாதம் வரை
சிலிர்க்கிறதடா
உனை கொஞ்ச நேரம் காணவில்லையென்றால்
என் மனம் நோகிறதடா
தெரு தெருவாய் சுற்றி
அலைந்து திரிந்து உனை காணுகையில்
என் உயிர் என்னுள் வருகிறதடா
நீ சாப்பிடாமல் விளையாட
ஓடுகையில்
என் சோறும்
நாளை பழையசோறாகிறதடா
உனக்காக ஆயிரம் திட்டு
வாங்கினாலும் வலிப்பதில்லையடா
உன்னால் நெஞ்சில் மிதிவாங்கினாலும் எனக்கு வலிப்பதில்லையடா
ஆனால் உன் பிரிவு
எனை உயிரோடு கொல்கிறதடா
உனக்கு நிறைய வாங்கி தர ஆசை தான்
ஆனால் என்னிடமோ
என் உயிரை தவிர ஒன்றுமே இல்லை
உலகை ஆளப்பிறந்த என் இராசாடா நீ
நடு இரவில் எழுந்து வந்து
யாரையும் எழுப்பாமல்
எனை தேடி கண்டுபிடித்து
சித்தி தண்ணீ
என்று நீ சொல்லும் அந்த மழலை மிகப்பிடிக்கும்
இராகங்கள் உன்னிடம்
பாடம் கற்க வேண்டும்
உன் கொஞ்சல் மொழியை
அவையெல்லாம் யாசகம் பெற வேண்டும்
என் செல்லக்குட்டி பாப்பா
எனக்கு ஒரு முத்தம் வையடா
என் மாணிக்கமே
இசையே
அழகே
அமுதே
ஒளியே
இருளை போக்கிடு
உலகை வென்றிடு
உன்னை உயர்த்திடு
உயிரே
~ பிரபாவதி வீரமுத்து