நீ எங்கே

தத்தி தத்தி
நான் நடந்து போக
என்னை
திட்டி திட்டி வந்தவள் எங்கே

தூக்கம் இன்றி
துயரம் இன்றி என்னை
தூக்கி விளையாடியவள்
எங்கே

ஏங்கி ஏங்கி நான்
அழுக என்னை
தோளில் தாங்கி
தலாட்டு பாடியவள்
எங்கே


நான் நடந்து போக
நடை பழக்கியவள்
எங்ககே நான்
நடந்து போக

கண்ணும் கருத்தாய்
பூக்கும் மலராய்
என்னை பார்த்தவள் எங்கே

நான் தோடும் உறவுகளை
என் கரங்களில் தந்தவள்
எங்கே

நான் உன்னை காணும்
முன்பே
காலம் செய்த
கோலம் இதுவா நீ
மரணித்து இருப்பது


திடுக்கிட் நான் எழுந்து
அழும் போது
என் கண்களை யார்
துடைப்பார்

பாதையில் நான்
நடக்கையில் என்னை
அன்னையில் கை பிடித்து
நடக்கும் ஞாபகம்


உன் கால் தீண்டும் போது
என் அகத்தில் நீ தந்த
முத்தங்களின் ஞாபகம்

உணவு உண்ணும்
வேளையில் நான்
களவாக உன்னிடம் உணவு
உண்ணும் ஞாபகம்


என் காலமும் முடியும்
நேரம் இது
என் கல்லறையும் என்னை அழைக்கும்
காலம் இது
நான் பயணிக்கிறேன்
என் கண்களை துடைக்க யாருமில்லை
என கூறியபடி




பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (18-Jun-16, 2:58 pm)
Tanglish : nee engae
பார்வை : 166

மேலே