தெருவோரக்கிழவி

தெருவோரக்கிழவி,

நான் கிராமத்துக்கு வரும்போதெல்லாம்
"யாருப்பா ஒத்தவீட்டுக்காரர் மகனா?
நல்ல இருக்கியா?' என்று,
உன் உள்ளங்கைய்யால் கண்களுக்கு நிழல் கொடுத்து
கொல கொல வாயுடன் வெற்றிலை சகிதமாய்
என் நலம் விசாரிப்பாய் !

முட்டுச் சந்தை நான் கடக்கும் போதெல்லாம்
உன் பொக்கை வாய் சிரிப்புடன்
என்னை வரவேற்ப்பாய் !


அன்று,
நீ ஒரு குவளை நீர் கேட்ட பொழுது ,
அருவருப்புடன் எட்டு வைத்து
உனக்கு தண்ணீர் ஊற்றிய பெரிய வீட்டுப் பெண்


இன்று,
"பாவம்..நல்ல கெழவி போய் சேர்ந்துருச்சு" என்று
உனக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறாள்.

சிரிப்பாய் வருகிறது...!


அன்று,
உன்னை நம்பி ஒரு வெற்றிலை பாக்கு
கடன் கொடுக்காத பெட்டி கடைக்காரர்

இன்று,
"எப்ப பாத்தாலும் கடை முன்னாடியே
உக்காந்துட்டு இருக்கும்
கெழவி கண்ணுக்குள்ளய்யே இருக்கு" என்று சிலகிக்கிறார்.

சிரிப்பாய் வருகிறது...!

நீ என் அம்மாவிடம் உன் ஊதாரி பேரனின்
செயல்களை விமர்சிக்கும் வார்த்தைகள்
என் வீட்டு முற்றத்தில் நான் நிற்க்கும்
இத்தருணத்திலும் என் காதுகளில் விழுகிறது.


கிழவி,

உன் நினைவுகள் வரும் தருணம்
"உச்" கொட்டியபடி வருந்த நான் மறக்கவில்லை....

எழுதியவர் : வெ.சத்ருக்னன் (22-Jun-11, 6:18 pm)
சேர்த்தது : shathrugnan
பார்வை : 269

மேலே