விவசாய நிலமெல்லாம் ரியல் எஸ்டேட்டுக்குத்தானா

விவசாய நிலமெல்லாம் ரியல் எஸ்டேட்டுக்குத்தானா?
@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@

பருப்பு விலை உயர்வைச் சமாளிக்க, வெளிநாடுகளில் நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கத் திட்டம்! - மத்திய அரசு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கருத்து: அப்ப..... இங்க இருக்கற நிலமெல்லாம் ரியலெஸ்டேட்டுக்குத்தானா?!


-- வ, முருகன், பாப்பனப்பட்டு.

*******************************************************************************************************************************************************
‘தி இந்து’ திங்கள், ஜூன்.20, 2016.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மழை வளம் குறைந்ததாலும், விவசாயிகளின் கடன் சுமையினாலும் குறைந்த விலைக்கு விற்கும் நிலமை. ரியல் எஸ்டேட்

வர்த்தகம் செய்வோர் அந்த நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்றுகோடீஸ்வரர்கள் ஆகிறார்கள். அவர்கள் எல்லாம் சரியான

வருமான வரி செலுத்துவார்களா என்பது சந்தேகமே. அந்தத் தொழிலில் கோடீஸ்வரர்கள் ஆனவர்களில் ஏதாவது ஒரு கட்சியில்

சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார்கள். ரியல்எஸ்டேட் உரிமையாளர்களின் ஆதரவு எல்லாக்கட்சிகளுக்கும்

உண்டு. அதே போல் நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கும் கடைகள் பலவற்றில் விற்கப்படும் பொருள்களுக்கு

ரசீதே கொடுப்பதில்லை. எஸ்டிமேட் என்று அச்சடித்த தாளில் தான் பொருளின் விலை, வாங்குபவர் பற்றிய விபரத்தை அச்சிட்டோ


கையில் எழுதியோ தருகிறார்கள். கருப்பு பணம் உள்ள சிலர் ஏராளமான வீட்டு மனைகளை வாங்கிக் குவிக்கிறார்கள். நகர்களைச்

சுற்றியிருக்கும் பகுதிகளில் காலி மனைகளின் அணிவகுப்பைப் பார்க்கலாம். இப்படி எத்தனையோ பேர் வரி ஏய்ப்பு

செய்கிறார்கள்.நாட்டில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் பறிமுதல் செய்ய மத்திய அரசு நாடு தழுவிய சிறப்பு புலனாய்வுத் துறை

ஒன்றை ஏற்படுத்தி ஒவ்வொரு தாலுகாவிலும் 500 புலனாய்வு அதிகாரிகளை நியமித்து அவர்கள் மூலம் கருப்புப் பணத்தைக்

கண்டறிந்து பறிமுதல் செய்யவேண்டும்.


மழைவளத்தைப் பெருக்க அழிக்கப்பட்ட வனங்களை உயிர்த்தெழச் செய்ய போர்க்கால அடிப்படையில் ஆவன செய்யவேண்டும்

. பொட்டல் காடுகளிலும் மொட்டைக்கரடுகள், குன்றுகளில் பருவ மழைக்கு முன்பே வறட்சியைத் தாங்கி வளரும் தாவரங்களின்

விதைகளை ஊன்றி வைக்கவேண்டும். அரசு மானியத்துடன் மழைநீர் சேகரிப்பை/சேமிப்பை துரிதப்படுத்தவேண்டும். அரிசியை

விட புன்செய் நிலங்களில் விளையும் சிறு தானியஙகளான வரகு, திணை, சாமை , பச்சைப்பயிறு, தட்டைப் பயிறு, மொச்சை

போன்றவற்றை விளைவிக்க விவாசயிகளை ஊக்கப்படுத்தவேண்டும்.

மேட்டுர் அணையில் நீர் இலலாத காலங்களில் அணை நீரை நம்பி விவசாயம் செய்வோரை நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, குறுகிய

காலத்தில் விளைச்சலைத் தரும் பயறு மற்றும் சிறுதானிய வகைகளைப் பயிரடச் சொல்லி ஊக்கப்படுத்தவேண்டும்.

இதையெல்லாம் சிறப்பாக செயலப்டுத்தினாலே நாம் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி

செய்யவேண்டியிருக்காது. பொருளாதாரம் சீர்படவும், நாட்டின் ,முன்னேற்றம், மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கும் பூரண

முதுவிலக்கை அமால்படுத்தி ரவுடிகளை ஒழித்துக்கட்டனாலே போதும்.

பொருளாதாரக் குற்றம் புரிவோர்க்கு கடுமையான தண்டனை வழஙகவேண்டும். கோடிக்கணக்கில் ஊழல் செய்வோர்க்கு வாழ்நாள்

கடுங்காவல் ஆயுள்தண்டனை கொடுப்பதுடன் அவர்கள் சொத்து மற்றும் பினாமிகளின் சொத்து முழுவதையும் அரசு எடுத்டுத்துக்

கொண்டு அந்தமான் சிறைச்சாலையைப் புதுப்பித்து அங்கே அடைத்துவைக்கவேண்டும். 10 ரூபாய் லஞ்சத்தையும்

ஆயிரக்கணக்கில் பெறும் லஞ்சத்திறும் ஒரே மாதிரியான தண்டனையை வழஙகக் கூடாது. பத்து ரூபாய் லஞ்சத்திற்கு ஒரு மாதம்

ஜெயில் தண்டனை, வேலை இழப்பு இல்லாமல். ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெறுவோரின் சொத்து மற்றும் அவர் குடும்பத்தின்

பெயரில் உள்ள சொத்து நகை நட்டு,வீடு அனைத்தையும் பறிமுதல் செய்து 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வேலை இழப்பை

நடைமுறைப்படுத்தவேண்டும். அவர் குடும்பத்தில் யாருமே வேலையில் இல்லாதபட்சட்த்தில் அவர்களில் யாராவது ஒருவருக்கு

குடும்பத்தைக் காப்பாற்றும் அளவுக்கு சம்பளம் கிடைக்கும் வேலையை அரசு தரவேண்டும்.

எழுதியவர் : மலர் & தி இந்து. (20-Jun-16, 3:27 pm)
பார்வை : 214

மேலே