ஆதரிப்பாயா பெண்ணே…
வெண்மதி நாணும் வதனம் கொண்டு
கரு வண்டு நாணும் கண்கள் கொண்டாள்..
முல்லை மொட்டு நாணும் இதழ் கொண்டு
சின்ன சிட்டு போல துள்ளித் திரிகிறாள்…
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுமாய் பேசி
சுட்டும் விழி கொண்டு வித்தை காட்டுகிறாள்..
எட்டு திக்கும் என்னை அலைய விட்டு ஏனோ
பட்டும் படாமல் பாவனை செய்கிறாள்..
விட்டில் பூச்சி வெளிச்சம் நோக்கி பறப்பது போல
கட்டில் தூக்கம் கணிசமாய் மறந்த நான்..உன் இதழ்
மொட்டில் தேனெடுக்க மும்முரமாகிறேன்…ஒரு
எட்டில் உன் கரம் பற்றிடுவேன் கண்ணே….
ஆதரிப்பாயா பெண்ணே…?