காதல் செய்த பாடு
உன்னை காதலித்தேன்
உண்மையாய் காதலித்தேன்
உயிராய் காதலித்தேன்
உருகி உருகி காதலித்தேன்
நீயும் இப்படித்தான் காதலித்தாய்
உன்னையே !
விளைவு
வாழ்க்கை மீது
ஆசைகள் கொண்டேன்
அழுகை மிச்சம்
எதிர்பார்ப்புகள் கொண்டேன்
ஏமாற்றம் மிச்சம்
கனவுகள் கொண்டேன்
கண்ணீர் மிச்சம்
காதல் என்ற பெயரால்
என் சிறகுகள் உடைக்கப்பட்டது !
இருந்தும் நடந்துவிடுவேனோ
என்ற ஐயத்தில்
என் கால்களும் கட்டப்பட்டது !
உண்மையில் எனக்கு
நடக்கவும் வேண்டாம்
பறக்கவும் வேண்டாம்
இறக்கத்தான் வேண்டும்!