இதயக்காயம்
அந்த_நொடி
அடுத்த நொடி தாலி ஏற இருக்கையிலே
உன்ன பிரிஞ்ச நொடி நெஞ்ச இறுக்குதடா..
காதலிச்ச போது இருந்த வீரம்
நம்மை பெற்றோர் பிரிச்ச போது வீழ்ந்தே போனதுடா...
அலங்காரம் பண்ணும் போது
என் கண்கள் தானா கண்ணீர் சிந்துதடா...
பூமாலை சூடும் வேளை
என் உடலே வாடிப் போகுதடா...
உனைப் பிரிஞ்ச நானிப்போ மணவாழ்வில் கலக்கும்வேளை
எனப்பிரிஞ்ச நீயிப்போ எப்படித்தான் தவிக்கிறியோ..
ஒரு வேளைக்காவது உண்ணுறியோ...
ஒரு நொடிக்காவது உறங்குறியோ..
எனை எப்போதும் எண்ணுறியோ...
இந்த ஜென்மம் சேரவில்லை..
இதயக்காயம் ஆறவில்லை...
அடுத்த ஜென்மம்னு ஒண்ணுருந்தா..
ஒன்னு... ஒரே சாதியிலே பொறப்போம்...
இல்ல...சாதியில்லா ஒலகத்துல பொறப்போம்...