ஆன் லைன்ல
முருகேசுவின் மனைவி, ‘ஆன் லைன்ல சல்வார் செலெக்ட் பண்ணிக்கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்த முருகேசுவிடம்.....
மனைவி : ஏங்க? இந்த மாடல் பாத்தீங்களா? . இது நல்லா இருக்கா..?
முருகேசு : இது நல்லா இல்லே செல்லம்
மனைவி : அப்ப இது? ...
முருகேசு : ம்ஹூம்... நல்லா இல்ல..!
மனைவி : அப்போ இந்த மாடல் எப்படி..?
முருகேசு : சுமார் தான்....!
மனைவி : சரி இந்த மாடல் நல்லாவே இருக்கு… நீங்க என்ன சொல்லுறீங்க?..
முருகேசு : ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை........
மனைவி : ஏங்க அப்படி சொல்லுறீங்க?
முருகேசு : மூக்கு சப்பையா இருக்கு..!
மனைவி : என்னது மூக்கு சப்பையா? அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்களா..?? சல்வாரை பார்க்கல...?!
முருகேசு : " சல்வாரா.? சொல்லவே இல்ல.....???