அழகிய தமிழ் மகளே

தமிழ்தாய் மென் மடியில்
பொன்மகளாய் பூத்தவள் நீ...
பிழைத்த நல் மொழியில்
செம்மொழியே மூத்தவள் நீ...

உனை தொடுத்து கவி பாட
கரும் கல்லும் காதல் கொள்ளும் !
மழை தூறல் தமிழ் பேச
வெறும் மண்ணும் வாசம் தள்ளும் !

வெளிர் நீலவானம் உன்
தேகஆடை!
கரும் மேகக்கூட்டம் உன்
நீளகூந்தல் !!

விழும் சாரல் மழை
உன் தேக ஊடல் ...
வீசம் தென்றல் கூட
உன் சுவாச மூச்சி...

அழகிய தமிழ் மகளே
தமிழ் தாயின் கலைமகளே ...
என் காதல் கண்மணி நீ !
என் மோக கற்பனை நீ !!

எழுதியவர் : தீ.ஜெ.ஆகாஷ்வருண் (28-Jun-16, 1:04 am)
பார்வை : 134

மேலே