காதல் தேர்தல்
இதுவரை இழுபறி நிலையே..!
உன் இதயத்தில் என்
காதல் வாக்குகள் எண்ணிக்கையில்,
எண்ண முடியாதவை
என்று தெரிந்தும் எண்ணிக்கொண்டிருக்கிறாய்.!
எண்ணு என்னை பிடிக்கும் வரை,
எண்ணு..!
எண்ணி முடித்ததும்,
உன் இதய பேரவையில்
இடம் கிடைக்குமா..!
இல்லை....!
என் இதய டெபாசீட்டை
இழப்பேனா..!
வார்த்தைகளால் வாக்களிக்க
உனக்கு தயக்கமா..!
இல்லை....!
காசு வாங்கியே வாக்களித்த
பழக்கமா..!
காத்துகிடக்கிறேன்
கைபிசைந்து...!
காதல் தேர்தல்
முடிவை சொல்லிவிடு..
இதய பேரவையில்
இடம் கொடுத்துவிடு...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
