விழியின் முரண்
என்னவளின் கண்களை
நேசிக்க முடிந்த
என்னால் ஏனோ
அவளது
கண்ணீரை காண
விருப்பமில்லை !!!!
இரண்டுமே அவளுடையது தான்
ஒன்றை நேசித்தும்
ஒன்றை வெறுத்தும்
ஏன் இந்த முரண்
என் உண்மை
காதலில் !!!!!!!!!
உண்மைதான் -அதில்
நன்மை எதுவோ
அதை நான்
விரும்பினேன் !!!!!!!!!!
முரணிலும் என் நென்சுரம்
விரும்பியது -அவள்
விழிப் பார்வையின்
புன்னகையைத் தான்!!!!!!!!!!!