கொடுமையிலும் கொடுமை

சின்னஞ்சிறு வயதில் ஒரு
சிட்டுக்குருவியாய் சுதந்திரவானில்
சுற்றிதிரிந்திருந்தேன் நானும்

அன்னையின் மடியில் ஆனந்த
துயில் கொண்டிருந்தேன்
ஒவோர் நாளும்

வசந்தமே வாழ்க்கையாய் தாய்
தந்தையுடன் வாழ்ந்துதான்
வந்தேன் நானும்

தோழர் தோழியுடன் சேர்ந்து
விதியும் சற்றே என்னுடன்
விளையாடிக்களித்தது

விளையாட்டின் முன்னுரையிலேயே
என் முகவரியை இழந்தேன்

எனது பெயர் என்னவென்று
அறிந்திருந்தும் அனாதை என்றே
அனைவராலும் அழைக்கப்பட்டேன்

பருவ சுழற்சியால் மழலையாய்
இருந்த நான் மங்கையாய் மலர்ந்தேன்

கொடுமையிலும் கொடுமை
இளமையில் வறுமை என்பதை
ஒளவை எங்கனம் அறிந்திருந்தாலோ

என்ன அதிசயம் ஏழ்மையின் உச்சம்
நான் என நினைத்திருந்தேன்
ஆனால் பாவம் இவர்கள்

வீதியில் கிடந்தவளை விற்று
பணம் பெறும் அளவிற்கு வறுமை
அவர்களை வதைத்தது போலும்

சென்ற இடத்தில் சிறப்பான வரவேற்பு
வெண்மையான தேகத்திற்கு
கிடைத்த வெகுமதிபோலும்

பத்தினி விரதமிருந்து பலநாள்
தவமிருந்தாலும் மணமாகாமல்
மனம்முறிந்த முதிர்கன்னிகளுக்கு மத்தியில்

இங்கே எனக்கு தினம் தினம் திருமணம் வாழ்நாள் முழுவதும்
சேர்ந்து வாழ வரதட்சணை என்ற பெயரில் வசூலிக்கும் ஆண்கள்தான்
எங்களிடம் ஒர் இரவு மட்டும்
சேர்ந்துவாழ தட்சணை தருகின்றனர்

நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வந்துபோகும்
கண்ணியவான்கள் எல்லாம் எனது
கட்டுடலை வர்ணிக்கின்றனரே தவிர
சிதையுண்ட என் மனதை
செப்பனிடுவோர் எவரும் இலர்

இன்றளவும் விலைமாதுவின்
மயக்கத்தில் வீழ்த்தவர் எவரும்
மீண்டதை கண்டதில்லை

இறைவன் என ஒருவன் இருப்பது
உண்மை என்றால் எங்களின்
சார்பாக ஒரே ஒரு வேண்டுதல்
மட்டும் தான்

அனுதினமும் பாலியல் பலாத்காரம்
என்றபெயரில் ஒருபாவமும்
அறியாத சின்னஞ்சிறு மொட்டுகளுக்கு
எதிராக நடக்கும் வன்முறையை
செயலாற்றும் கேடுகெட்ட ஆண் மக்களை
எங்களிடம் மட்டுமே வர வழையுங்கள் " நாங்கள் இருக்கிறோம் ".

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (29-Jun-16, 11:38 am)
பார்வை : 346

மேலே