அம்மாவின் அழுகையை•••
மகன் :- அம்மா உங்க ஊட்டுகாரர் காலமாகிவிட்டதா நெனைச்சி நெனைச்சி தெனம்தெனம் நீ அழுவுர அவுராவது சாவரதாவது உன் வீட்டுக்குள்ளேயே உன் எதிரிலேயே நடமாடிக்கிட்டு இருக்காரு அது உன் கண்ணுக்கு தெரிகிறதா ?
அம்மா :- என்னப்பா சொல்ற எங்க•••!
மகன் :- அதோ ஒடி அடுப்பங்கரையில பதுங்குறாரு பாரு•••!
அம்மா :- அது மூஞ்செலிடா••!
மகன் :- என்னம்மா ஊட்டுகாரற கொஞ்சம்கூட மரியாதை இல்லாம மூஞ்செலின்றீங்க அவரு சாவரதுக்கு முன்ன நம்ம வீட்ல இப்படி ஒரு எலிய பாத்திருக்கியா•••?
அம்மா :- இல்ல•••!
மகன் :- இப்போ பாக்கமுடியிதுன்னா என்ன அர்த்தம்••••?
அம்மா :- என்ன அர்த்தம்•••?
மகன். :- அவருடைய ஆவி நம்மல விட்டு பிரிய மனமில்லாம மூஞ்செலி ரூபத்தில வந்திருக்காருன்னு அர்த்தம் இந்தமாதிரி நீ அவரகவனிக்காம அழுதுகிட்டே இருந்தா வீட்ட விட்டே போயிடுவாரு••!
அம்மா :- இல்லப்பா இனிமே நான் அழவந்தாக்கூட அழவே மாட்டேம்பா நீ வேலைக்கு போயிட்டு நேரத்தோட வந்துடு ••••!
மகன். :- அப்பாடா அம்மாவின் அழுகையை ஒரு வழியா நிருத்தியாச்சி ரொம்ப நன்றி வினாயக பெருமானின் வாகனமே••••!