உனக்காக காத்திருப்புபூ
அதிகாலை முதல் சூரிய உதயமாய்
உன் நினைவுகள் ....
அந்தி மாலை முதல் நிலா வெளிச்சமாய் உன் கனவுகள் ....
மாறி மாறி எனை கறைத்தன
இன்றைய பொழுதுகள்.....
நதியில் மிதக்கும் ஒடமாய்
மிதக்கின்றன என் நிமிடங்கள் ....
சாளரத்தின் பார்வையாய்
பறிபோகும் என் மணிதுளிகள் ....
உனக்காக காத்திருக்கவே
பல நேரங்களில் என்னில் மௌன மொழிகள் ....
உன் மீது நான் கொண்ட காதலை
உரைக்கவே துடித்து கொண்டிருக்கின்றன என் கடிகாரமுற்கள் .....
நீ வந்து போனதை
முன் மொழிகின்றது என் வீட்டு கண்ணாடி எனை அழகாய் பிரதிபலித்து...
மீண்டும் நீ வருவாய் என அழகாய் பூத்து குலுங்குகிறது என் வீட்டு ரோஜாப்பூ ....
எனைப் போலவே.....