உன்ன காணலையே

மேகம் கருக்குதிங்க...
மின்னல் சிரிக்குதிங்க...
உன்ன காணலையே..
கருப்பு குடையும்
விரிச்சாச்சு...
பள்ளி விடுமுறை விட்டாச்சு
உன்ன காணலையே....
பயிரும் வாடி போகுது...
வறுமை கூடி போகுது...
உன்ன காணலையே..
வானிலை அறிக்க வந்தாச்சு
மீன் பிடி தடை போட்டாச்சு
உன்ன காணலையே...
காகித கப்பல் செஞ்சாச்சு
மின்சாரம் பறி போயாச்சு...
உன்ன காணலையே....
கடலும் வற்றி
போயாச்சு
வாங்கிய கடனும் ஏறி போயாச்சு
உன்ன காணலையே....
நீ வந்தால் செழிக்கும்
வாழ்க்கை இங்கே ...
வாராமல்
போன வாழ்க்கை எங்கே?

எழுதியவர் : கிரிஜா.தி (7-Jul-16, 1:40 pm)
Tanglish : unna Kaanalaiye
பார்வை : 251

மேலே