ஒரு கவிதையின் டைரி••••

காகிதத்தில் எழுதிய
தன் எண்ணங்களை
யாரும் திருடியேனும் படித்துவிடக்கூடியது !

இரகசியம் வெளிப்படும்
வாய்ப் பேச தடைபடும்
மரியாதை சிறைபடும்
மானம் குறைப்படும்

உள்ளமும் ஒரு டைரியே
அதனை திருடி படிக்க
படைத்த ஆண்டவனாலும்
இயலாதென்பர் அனுபவிகள் !

உள்ளத்தை உடையோர்
உள்ளத்தில் உள்ளதை
வெளியே கொணர தானே சொன்னாலொழிய
உலகமறிய வாய்ப்பேது !

நினைத்தவை கலைந்திருக்கும்
நினையாதது மலர்ந்திருக்கும்
வரும்பியவை துலைந்திருக்கும்
விரும்பாதவை
குவிந்து நிற்கும் !

அந்த அற்புத கவிதையினை
அறிய நேர்ந்தால் அதில்
புதுமை புதைந்திருக்கும்
நண்மை நிறைந்திருக்கும்
தீமையழிந்திருக்கும்
உண்மை மகிழ்ந்திருக்கும்
சத்தியம் காத்திருக்கும்
போற்றிப் புகழ்ந்திட
அந்த" ஒரு கவிதையின் டைரி" யில் மட்டுமே !

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (9-Jul-16, 8:38 pm)
பார்வை : 117

மேலே