தினம் ஒரு காதல் - ஜோடி பாடல் 51 - = 163

“மிடி அணிந்த மீனம்மா
மாமன் உனக்கு நானம்மா
என்னைப்பாத்து நாணப்பட்டு
நடை மெலிவது ஏனம்மா ?”

“காதல் ஒரு கவிதைதான்
அதை எழுதுவது சுலபம்தான்
என்னில் இல்லை தயக்கம்
உன்மேல் எனக்கு மயக்கம் !”


உலகம் உள்ளவரை காதல் இருக்கும்
உயிர்கள் அதனை உயர்த்திப் பிடிக்கும்

நெஞ்சம் ரெண்டும் நெருங்கும்போது
விழிகள் நான்கும் விரகமொழி பேசும் !

வாழும் காலம் வரை
வாழ்க்கை கடலில் குளிப்போம்

விடியும் பொழுதுவரை
விரகத் திடலில் களிப்போம்



விதி என்று ஏதுமில்லை
விதி நமது செல்லப்பிள்ளை

விதியோடு விளையாட
வாருங்கள் காதலரே !

தினம் நூறு கவிதைகள்
அரங்கேறும் காதலில்

ஒருவரோடு ஒருவருக்கு
அளப்பரியா ஊடல்கள் !

எழுதியவர் : சாய்மாறன் (15-Jul-16, 3:35 pm)
பார்வை : 109

மேலே