தோஸ்த்து

தற்சமயம் எங்கள் வீட்டில்
வேலையின்றி இருவர்
வெட்டியாக இருக்கின்றோம்
அவ்விருவர்
நானும் எனது நாயும்….!

நான் எனது கவிதைகளோடு
குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கிறேன்
என் கவிதை வாசிப்பைக்கேட்டு
எனது நாய் குரைத்தபடி இருக்கிறது.

சாய்மாறன் (15/7/16)

எழுதியவர் : சாய்மாறன் (15-Jul-16, 3:06 pm)
பார்வை : 105

மேலே