டீ கடை

"" ஏன்ப்பா நம்ப காஷ்மீர்ல என்ன தான் பிரச்சனை ??

""மோடி போகாத நாடு தான் இருக்கா சொல்லு""

""இந்த ஸ்வாதி பொண்ணு கொலை case இழுத்துகினே போவுதே??""

""அத்த வுடு என்னமோ GST'னு சொல்லறாங்களே அதுனால நமக்கு என்னப்பா நல்லது??""

"" 7th pay-commission ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லையாமே??""

""பெட்ரோல் 2 ரூபா கொறஞ்சுருக்குப்பா""

""அந்த 570 கோடி என்னாச்சுனே தெர்லல??""

""ஆமாம் அந்த அம்மா தான் திரும்ப சி.எம் ஆயிடுச்சே"", ஆனா முதல்வர் மாநாட்டுக்கே போவலையாமே??""

""ஸ்கூல் பக்கத்துல கஞ்சா சாக்லேட் விக்கறானுவலாமே""

""ஏதோ share market கீழ பூட்ச்சாமே??""

""இன்னி தேதிக்கு தங்கம் கூடா வாங்கிடலாம் போல்து தக்காளி தான் வாங்கமுடில""

""நீ இன்னா வேனா சொல்லிக்கோ, கும்ப்ளே தான் சரியான சாய்ஸ்சு"".............................................




"""டீ கடைக்காரரே, இந்த 4 டீக்கு காசு நாளைக்கு தரேன் பா !!!!!!!!!!!!

எழுதியவர் : தமிழ்தாகம் (18-Jul-16, 2:39 am)
பார்வை : 96

மேலே