பருவம் தந்த பரிசோ
அவன் கண்கள் என்னை ரசிக்கும்போது....
நடையோ தளர்ந்து தயங்குது.....
இடையோ நெகிழ்ந்து நெளியுது.....
கைகள் தானாய் தன்னிலை இழந்து
முந்தானையை முன்னில் இழுக்குது.....
கண்ணிமைகள் படபடத்து
முகத்தில் நாணம் வெடிக்குது
செந்நிறம் கன்னம் படருது.....
பின்னலிட்ட முகில் கூந்தல்
இட வலமாய் ஆடி ஆடி
இயல்பை ஏனோ குலைக்குது
இதழோ எனை மீறி நகைக்குது......
இது பருவம் தந்த பரிசோ.....?
இல்லை பார்வைக் கள்வன் பரிசமோ...?
கவிதாயினி அமுதா பொற்கொடி